மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!
உலகின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் ஜான் மில்டன். உலகில் இவருடைய கவிதைகள் இல்லாத பொது நூலகமோ, கல்லூரி நூலகமோ இருக்கவே முடியாது.


கவிஞர் ஜான் மில்டன்
உலகின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் ஜான் மில்டன். உலகில் இவருடைய கவிதைகள் இல்லாத பொது நூலகமோ, கல்லூரி நூலகமோ இருக்கவே முடியாது.
÷ஆங்கிலக் கவிதைகள் என்றவுடன் உடனே நினைவுக்கு வருபவர் ஜான் மில்டனே!
÷இவரது கவிதைகளைப் படிக்கும்போது சில வேளைகளில் வானில் சஞ்சரிக்கலாம். நம்முடைய சிந்தனை உணர்வுகள் அந்தக் கவிதைகளில் காணப்படும் நிகழ்வுகளை நினைத்து நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்லும். சில நேரங்களில் கண்ணீர் வழிய வைக்கும். நம்மையே ஆன்ம பரிசோதனை செய்திட வைக்கும்.
÷இத்தகைய ஒப்பரிய கவிஞர் ஜான் மில்டனின் மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுவது, "இழந்த சொர்க்கம்' (டஹழ்ஹக்ண்ள்ங் ப்ர்ள்ற்) என்னும் காவியமே!
÷காரணம்--
÷அந்தக் கால கட்டத்தில் முற்றிலும் பார்வையை இழந்திருந்தார். அவர் வரிகளை சொல்லச் சொல்ல அவருடைய மகள்கள் எழுதியவை. பார்வையற்ற நிலையில் அவர் படைத்த அந்தப் படைப்பே அவருடைய சிறந்த படைப்பாகக் கருதப்பட்டு உலக அளவில் இன்றும் பாராட்டப்பட்டு வருகிறது.
÷1609 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் பிறந்தவர். இளம்பருவம் முதல் நூல்கள் படிப்பதில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். தினமும் நள்ளிரவு வரை நூல்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
÷ஆரம்பத்தில் லண்டனில் உள்ள செயின்ட் பால்ஸ் பள்ளியில் படித்தார். 1625} ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தோடு இணைந்த கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். தனது மேற்படிப்புக்கான பட்டத்தை 1632}ஆம் ஆண்டில் பெற்றார். தன்னுடைய 21}ஆம் வயது முதல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இவருடைய தந்தை இவரை ஒரு வழக்கறிஞராக ஆக்க வேண்டும் என்று விரும்பினார். அவருடைய விருப்பம் நிறைவேறியிருந்தால் தலைசிறந்த கவிஞர் கிடைக்காமல் போயிருக்கக் கூடும்.
÷கல்லூரியில் படிக்கும்போது தன்னுடன் பயின்ற அரச குடும்பத்தைச் சேர்ந்த எட்வர்டு கிங் என்பவர் நீச்சலடிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது நினைவாக அவருடைய நண்பர்கள் ஒரு சிறப்பு மலர் வெளியிட்டனர். மில்டனும் தன்னுடைய உணர்வுகளையெல்லாம் கொட்டி ஒரு கவிதை எழுதித் தந்தார். "லூசிடஸ்' (கன்ஸ்ரீண்க்ஹள்) என்ற தலைப்பில் அக்கவிதை வெளிவந்தது. அக் கவிதையைப் படித்தவர்கள் அனைவரும் பாராட்டினர்.
÷பிற ஐரோப்பிய நாடுகளுக்கு 1638}ஆம் ஆண்டு பயணம் செய்து அங்குள்ள சிறந்த சிந்தனையாளர்களைச் சந்தித்தார். அவரது புகழ் வளர்ந்து வந்த கால கட்டத்தில் தனக்குப் பார்வைக் கோளாறு ஏற்படுவதை உணர்ந்தார். அப்போது அவருக்கு வயது 32. இருப்பினும் அவர் கவிதைகள் எழுதுவதிலும், இங்கிலாந்து அரசியலில் ஈடுபடுவதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
÷ஒரு சமயம் ஆட்சி புரிந்து வந்த மன்னர் அதிகமாக வரிகள் விதிக்கவே, முடியாட்சியை அகற்றி குடியாட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று போராடியவர்களுடன் சேர்ந்து போராடியதோடு தனது எழுத்துக்கள் மூலம் அவர்களுக்கு ஊக்கமும் அளித்தார்.
÷1649}ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த முதலாம் சார்லஸ் மன்னரின் தலை புரட்சியாளர்களால் வெட்டப்பட்டு, குடியாட்சி ஏற்பட்டது. குரோம் வெல் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் அயல்நாட்டு மொழிகள் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளராகப் பணியாற்றினார் ஜான்மில்டன். இவர்களது குடியாட்சி முறையும் மில்டனுக்கு ஏமாற்றம் அளித்தது. மீண்டும் முடியாட்சி வந்தது. அதன்பின் அரசியலை விட்டு ஒதுங்கி வாழ ஆரம்பித்தார்.
÷1651}ஆம் ஆண்டில் அவருடைய இரண்டு கண்களிலும் முற்றிலும் பார்வை பறிபோனது. அந்தக் கால கட்டத்தில் ஜான் மில்டன் எழுதியதுதான் அவருடைய மிகச் சிறந்த காவியமான "இழந்த சொர்க்கம்'.
÷தினமும் தன் சிந்தனையில் உருவாகும் கவிதை வரிகளை தன் மனதிற்குள்ளேயே சொல்லிச் சரிபார்த்து, அவர் சொல்லச் சொல்ல அவருடைய இரண்டு மகள்களும் எழுதியது.
÷1667}ஆம் ஆண்டில் இந்தக் காவியம் வெளியானபோது அவர் புகழ் மேன்மேலும் பரவியது.
÷"இழந்த சொர்க்கம்' காவியம் முடித்த பிறகு தொடர்ந்து, "மீண்ட சொர்க்கம்' (டஹழ்ஹக்ண்ள்ங் ழ்ங்ஞ்ஹண்ய்ங்க்) என்ற படைப்பையும் அதனையடுத்து "ஸôம்சன் அகானிஸ்டெசின்' (நஹம்ள்ர்ய் அஞ்ர்ய்ண்ள்ற்ங்ள்ண்ய்) என்னும் படைப்பையும் 1671 ஆம் ஆண்டு மில்டன் வெளியிட்டார்.
÷1674 ஆம் ஆண்டு உலகம் என்றென்றும் போற்றும் கவிஞர் ஜான் மில்டன் மறைந்தார்.
÷கண் பார்வையற்ற நிலையில் மில்டன் படைத்த காவியமான "இழந்த சொர்க்கம்' என்றென்றும் புகழ்ந்து பேசப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...